'இந்தியா அதிக வரி விதிக்கிறது' - மோதி முன்னிலையில் பேசிய டிரம்ப்

காணொளிக் குறிப்பு, 'இந்தியா அதிக வரி விதிக்கிறது' - மோதி முன்னிலையில் பேசிய டிரம்ப்
'இந்தியா அதிக வரி விதிக்கிறது' - மோதி முன்னிலையில் பேசிய டிரம்ப்

உலகில் மிக அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா எங்களுக்கு உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பிரதமர் மோதி முன்னிலையில் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "உலகில் மிக அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா எங்களுக்கு உள்ளது. வரி விதிப்பில் அவர்கள் கடுமையாக இருந்துள்ளனர். அவர்களை குறை கூற வேண்டியதில்லை. வணிகம் செய்வதற்கான ஒரு வித்தியாசமான வழி அது." என பேசினார்.

விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)