காணொளி: நூதன கருவியை வைத்து திருட்டு காரை பிடித்த போலீஸ்
காணொளி: நூதன கருவியை வைத்து திருட்டு காரை பிடித்த போலீஸ்
அமெரிக்காவில் திருடி செல்லப்படும் காரை நூதன கருவி ஒன்றை பயன்படுத்தி காவல்துறை பிடிக்கும் இந்த காணொளி வைரலானது.
ஆகஸ்ட் 28-ம் தேதி மிச்சிகனில் கார் ஒன்று திருடப்பட்டு போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்லும்போது grappler எனப்படும் கருவி மூலம் திருடப்பட்ட காரின் பின் சக்கரத்தில் கொக்கியை மாட்டி அந்த காரை போலிசீஸார் பிடித்து இழுத்து நிறுத்தினர்.
பின்னர் அந்த கார் மீண்டும் தப்பிச்செல்ல முயன்றபோது காரின் பின்சக்கரமே கழன்று தனியாக வந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



