தேசிய அளவில் சர்ச்சையாக மாறிய கோவை ஓட்டல் உரிமையாளரின் பேச்சும், மன்னிப்பும் - என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, அரசியல் சர்ச்சையாக மாறிய கோவை ஓட்டல் உரிமையாளரின் பேச்சு - என்ன நடக்கிறது?
தேசிய அளவில் சர்ச்சையாக மாறிய கோவை ஓட்டல் உரிமையாளரின் பேச்சும், மன்னிப்பும் - என்ன நடக்கிறது?

கோவையில் நடந்த தொழில் அமைப்பினருடனான கலந்துரையாடல் கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒரு உணவக உரிமையாளர் ஜி.எஸ்.டி., குறித்து கேள்வியெழுப்பியது சர்ச்சையாகியிருந்தது.

இந்நிலையில், அந்த உரிமையாளர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, அதற்கு கருத்துக்களும் எதிர்வினைகளும் வந்தவண்ணம் இருந்தன.

இந்த நிகழ்வுகள் இரண்டு நாட்களாக நடந்துவந்த நிலையில், நேற்று காலையில் இது அரசியல் விவாதமாக மாறியது. தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் சீனிவாசனை மிரட்டிப் பணிய வைத்து, மன்னிப்புக் கேட்க வைத்ததாக, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பலரும், மிகக் கடுமையாகக் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

தி.மு.க., மகளிர் அணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் இதற்கு விளக்கமளித்துள்ளார்.

என்ன நடக்கிறது இந்த விஷயத்தில்?

ஜி.எஸ்.டி., கோவை

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)