8 கேமராக்கள் கொண்ட டெஸ்லா கார் இந்தியாவில் அறிமுகம் - சிறப்பம்சம் என்ன?
எட்டு கேமராக்கள் கொண்ட மாடல் Y கார்களை டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் முன் ஒருவர் நடந்து வந்தால் அல்லது வேறு ஒரு வாகனம் மோதி விடக்கூடிய நிலை ஏற்பட்டால், அல்லது வேறு எந்த தடை இருந்தாலும், காரை நிறுத்தவோ அல்லது சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கவோ டெஸ்லா கம்ப்யூட்டர் ஓட்டுநருக்கு எச்சரிக்கை அளிக்கிறது.
இந்த காரின் விலை 60 லட்சம் ரூபாய்.
ஆனால், நீங்கள் கூடுதலாக 6 லட்சம் ரூபாய் கொடுத்தால் ஆட்டோ பைலட் அம்சம் இருக்கும் காரை நீங்கள் வாங்கலாம். டெஸ்லா என்றாலே ஆட்டோபைலட் அம்சம்தான். ஆனால் கடினமான இந்திய சாலைகளில் இந்த ஆட்டோ பைலட் அம்சம் வேலை செய்யுமா?
இந்திய அரசு முழுமையான ஆட்டோனாமஸ் வாகனங்களுக்கு அதாவது தன்னை தானே இயக்கிக்கொள்ளும்
கார்களுக்கு அனுமதி அளிக்கும்வரை, டெஸ்லாவின் இந்த அம்சம் இந்தியாவில் பயனற்றதாகவே இருக்கும்.
இந்தியாவில் ஆட்டோ பைளட் அம்சத்திற்கு அனுமதியில்லை. மேலும், இந்த கார் கொண்டுள்ள எந்தவொரு முழுமையான ஆட்டோபைளட் அம்சத்தையும் இந்திய அரசின் அனுமதியில்லாமல் செயல்படுத்த முடியாது. டெஸ்லா அமெரிக்காவில் இதையொட்டி ஏற்கனவே பல வழக்குகளை சந்தித்து வருகிறது. அதனால் தான் டெஸ்லா இந்தியாவின் கடினமான சாலைகளில் களமிறங்கத் தயங்குகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



