'கங்கையை வென்றவன் தமிழன், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்' - கனிமொழி பேச்சு
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை பேசும் போது, ''கீழடியின் சிறப்புகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள், ஆனால் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டின் பெருமை உங்களுக்கு கண்களுக்கு தெரிகிறது'' என்று பேசியிருந்தார்.
அவர், " பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தது பற்றி தொடர்ந்து பேசுகிறீர்கள். எப்போதுமே தேர்தலுக்கு முன்புதான் தமிழ்நாட்டின் பெருமை மற்றும் கலாச்சாரம் உங்களின் கண்களுக்கு தெரிகிறது. ஆனால், இதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளின் சிறப்பை ஒப்புக்கொள்ள மறுத்தனர். தமிழ்நாட்டின் சிறப்பு பற்றி நாங்கள் பேசுவதை நீங்கள் விரும்புவதில்லை. இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் எழுதப்படும் என எங்கள் முதலமைச்சர் கூறினார். ஆனால் நீங்கள் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்தீர்கள். அந்த பெயரை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



