அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறி வரும் காளைகளை எதிர்கொள்ளும் வீரர்கள்

காணொளிக் குறிப்பு, உலக பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- 1100 காளைகள் பங்கேற்பு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறி வரும் காளைகளை எதிர்கொள்ளும் வீரர்கள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 6.30 மணியளவில் துவங்கி தற்போது வரை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்வை தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா துவக்கி வைத்தனர்.

வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் பிடிக்கின்றனர். ஒவ்வொரு காளையை அவிழ்த்து விடும்போதும் இரு சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அறிவிக்கப்படுகின்றன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1100 காளைகள் களமிறங்கும் என்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெறும்.

ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்பர். போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய மாடுபிடி வீரர்கள், சீருடைகள் அணிந்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போட்டியானது மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. போட்டி நேரம் நீட்டிப்பு செய்வது தொடர்பாக போட்டியின் நிலையை பொறுத்து மாவட்ட ஆட்சியரால் முடிவு எடுக்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)