அமேசான் நிறுவனர் பெசோஸ் - சான்செஷ் ஆடம்பர திருமணத்தை காட்டும் புகைப்படங்கள்

அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம், Instagram/Reuters

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் லாரென் சான்செஷின் ஆடம்பரத் திருமணம் வெள்ளிக்கிழமையன்று வெனிஸில் நடந்தது.

இந்த திருமணத்தில் கலந்துக்கொள்ள திரைப் பிரபலங்கள், நடிகர்கள், அரசு விருந்துனர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் வெனிஸிற்குப் பயணப்பட்டுள்ளனர்.

ஓப்ரா வின்ஃப்ரே, ஒர்லாண்டோ ப்ளூம், கைலி ஜென்னர் மற்றும் இவான்கோ டிரம்ப் ஆகியோர் வியாழன் மற்றும் வெள்ளியன்று வெனிஸின் தெருக்களிலும் படகுகளிலும் காணப்பட்ட பிரபலங்களில் ஒரு சிலர் ஆவர்.

இந்த நிகழ்வுக்கு எதிராக சுற்றுலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உள்ளூர் மக்கள் தொடங்கி காலநிலை மாற்ற செயற்பாட்டாளர்கள் வரை பல தரப்பிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

திருமணத்திற்கு பிறகு, 55 வயதான் சான்செஷ் ஆடம்பரமான நகைகள் மற்றும் ஆடைகளை அணிந்து 61 வயதான பெசோஸுக்கு அருகில் இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.

சான் கியோர்கியா என்கிற சிறு தீவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 200 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அங்கு இத்தாலிய பாடகர் ஆண்டியா போசெலியின் மகன் மேட்டியோ போசெலி நிகழ்ச்சி நடத்தினார். இந்த திருமணத்தின் துல்லியமான செலவு எவ்வளவு எனத் தெரியவில்லை என்றாலும் சில மதிப்பீடுகள் 20 மில்லியன் டாலரிலிருந்து 50 மில்லியன் டாலர் வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஓப்ரா வின்ஃப்ரே
அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிம் கர்தேஷியன்
அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேண்டால் ஜென்னர், கைலி ஜென்னர்
அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறிய மோட்டார் படகில் கையசைக்கும் ஜெஃப் பெசோஸ்
அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நடிகர் ஓர்லாண்டோ ப்ளூம்
அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெஃப் பெசோஸ் வருவதைக் கண்டு ஆர்ப்பரித்த சுற்றுலாப் பயணிகள்
அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ
அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவான்கா டிரம்ப்
அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்
அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெனிஸில் நடைபெற்ற போராட்டம்
அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம், Getty Images