காணொளி: தாய்லாந்தில் பந்தய கார் போல சீறி ஓடும் எருமைகள்
காணொளி: தாய்லாந்தில் பந்தய கார் போல சீறி ஓடும் எருமைகள்
எப்போதும் மெதுவாக செல்லும் எருமைகள், இந்த போட்டியின் போது திடீரென பந்தய கார் போல சீறி ஓடுகின்றன.
அக்டோபர் 6 ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற 154வது வருடாந்திர விங் க்வாய் எருமைகளுக்கான போட்டியை காண உலகம் முழுவதிலிருந்தும் ஏராளமானோர் திரண்டனர்.
பயிர் சாகுபடியில் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்த விலங்குகளை கௌரவிப்பதற்காக அக்டோபர் மாதம் தோறும் இந்த விழா நடைபெறுகிறது.
போட்டியின் விதி என்னவென்றால், "ஜாக்கிகள்" என்று அழைக்கப்படும் வீரர்கள், எருமைகளின் முதுகில் அமர்ந்து 100 மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும். கீழே விழும் வீரர், போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



