ரஷ்யா-யுக்ரேன் போர்: பிரான்ஸ் அதிபர் சொன்ன கருத்தை எச்சரித்த புதின் – காணொளி

காணொளிக் குறிப்பு, ரஷ்யா-யுக்ரேன் போர்: பிரான்ஸ் அதிபர் சொன்ன கருத்துக்கு எச்சரித்த புதின் – காணொளி
ரஷ்யா-யுக்ரேன் போர்: பிரான்ஸ் அதிபர் சொன்ன கருத்தை எச்சரித்த புதின் – காணொளி

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் யுக்ரேன் - ரஷ்யா போரில் யுக்ரேனை ஆதரிக்க மேற்கு நாடுகள் துருப்புகளை அனுப்புவது குறித்து பேசியிருந்தார். அவருடைய இந்த கருத்து ஐரோப்பாவை தாண்டியும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தவறான முடிவை எடுக்க வேண்டாம் என்று மேற்கு நாடுகளுக்கு ரஷ்யா எச்சரித்துள்ளது.

பாரிஸில் நடைபெற்ற ஐரோப்பிய தலைவர்கள் சந்திப்பில் பேசிய இமானுவேல் மக்ரோங், யுக்ரேனின் வெற்றி ஐரோப்பாவின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது என குறிப்பிட்டார். மேலும், யுக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவது சாத்தியமா இல்லையா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் பேசிய இமானுவேல் மக்ரோன், "தற்போது தரைப்படைகளை அனுப்புவதில் ஒருமித்த கருத்து இல்லை. ஆனால் எதையும் நிராகரிக்க முடியாது. இந்தப் போரில் ரஷ்யா வெற்றி பெறுவதைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்வோம். ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ரஷ்யாவை தோற்கடிப்பது அவசியம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என தெரிவித்தார்.

எனினும், துருப்புகளை அனுப்புவது குறித்து மக்ரோங் பேசவில்லை என கடந்த வெவ்வாயன்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீஃபன் செஜோர்ன் விளக்கமளித்தார்.

யுக்ரேனுக்கு ஆதரவாக துருப்புகளை அனுப்ப வேண்டும் என்ற மக்ரோங்கின் கருத்தை உலக தலைவர்கள் பலரும் நிராகரித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இருந்தோ, நேட்டோவில் இருந்தோ தரைவழி துருப்புகள் அனுப்பக்கூடாது என்ற் ஜெர்மன் Chancellor Olaf Scholz தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்த விகாரம் குறித்து பேசியபோது, ஏற்கனவே எங்கள் தரப்பில் இருந்து சிறு அளவிலான துருப்புகளை யுக்ரேனுக்கு அனுப்பியுள்ளோம் என்றார். பெரிய அளவில் துருப்புகளை அனுப்ப விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், யுக்ரேனிய வீரர்களுக்கு பிரிட்டன் பயிற்சி அளித்து வருகிறது. யுக்ரேனிய துருப்புகளுக்கு உபகரணங்கள் மற்றும் பிறவற்றை அனுப்புவதன் மூலம் நிச்சயமாக உதவுவோம் என்று கூறினார்.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 'யுக்ரேனுக்கு அமெரிக்கா துருப்புக்களை அனுப்பாது' என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், யுக்ரேனிய துருப்புக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட ராணுவ உதவியை வழங்குவதுதான் 'வெற்றிக்கான பாதை' என தான் நம்புவதாக பைடன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் (Jens Stoltenberg) யுக்ரேனுக்கு உடனடியாக துருப்புக்கள் அனுப்பும் யோசனையை நிராகரித்தார். "நேட்டோ போர் துருப்புக்களை யுக்ரேனிய பகுதிக்கு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை," என்று அவர் தெளிவுபடுத்தினார்.

சுவீடன், ஹங்கேரி, போலந்து மற்றும் செக் குடியரசின் தலைவர்களும் படைகளை போர்முனைக்கு அனுப்பும் நோக்கத்தை நிராகரித்துள்ளன.

இந்நிலையில், யுக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்ய அதிபர் putin எச்சரித்துள்ளார். நாட்டு மக்கள் முன்பாக அவர் ஆற்றிய ஆண்டு உரையில், மேற்கத்திய நாடுகளை தாக்கக்கூடிய ஆயுதங்கள் ரஷ்யாவிடம் உள்ளன என்பது மேற்கு நாடுகளுக்கு தெரியும் என்று கூறினார்.

மேலும், "நேட்டோ ராணுவக் குழுவை உக்ரைனுக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அவர்கள் பேசி இருக்கின்றனர். ஆனால் ஒரு காலத்தில் தங்கள் படைகளை நம் நாட்டின் எல்லைக்கு அனுப்பியவர்களின் தலைவிதியை நினைத்துப் பார்க்கிறேன். இப்போது சாத்தியமான தலையீடுகளின் விளைவுகள் மிகவும் சோகமானதாக இருக்கும். நம்மிடமும் ஆயுதங்கள் இருப்பதை அவர்கள் இறுதியில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தனது உரையில் Putin தெரிவித்தார்.

இத்தகைய செயல்கள் அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும் அச்சுறுத்தல் இருப்பது அவர்களுக்கு தெரியாதா என்றும் Putin எச்சரித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தது. இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இருநாடுகளுக்கும் இடையிலான போர் இன்னமும் நீடித்து வருகிறது.

ரஷ்யா-யுக்ரேன் போர்: பிரான்ஸ் அதிபர் சொன்ன கருத்துக்கு எச்சரித்த புதின்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)