கோலி, ரோஹித்தை விட தோனி சிறந்த கேப்டனா? உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் 2 வார இடைவெளியில் நடந்து முடிந்திருக்கின்றன. முதலாவதில், 41 வயதை எட்டிவிட்ட தோனி பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாம்பியனாக்கி சாதித்தார். மற்றொன்றில், ரோஹித் சர்மா ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டார்.
2007-ம் ஆண்டு அறிமுக டி20 உலகக் கோப்பையை வென்று சாதித்த பிறகு கேப்டன்சிக்கே தனி இலக்கணம் படைத்துவிட்ட தோனி, அதற்குப் பிந்தைய இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றியின் போதும் சரி, தோல்வியின் போதும் சரி ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களால் நினைவுகூரப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.
அதன் பிறகு, 28 ஆண்டு கால ரசிகர்களின் ஏக்கத்தை 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வென்றதன் மூலம் தீர்த்து வைத்த தோனி, 2013ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று காட்டி அசத்தினார். அதுதான், இந்திய அணி கடைசியாக வென்ற ஐ.சி.சி. கோப்பை. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக ஐ.சி.சி. தொடர்களில் இந்திய அணிக்கு தோல்வியே மிஞ்சுகிறது. அதிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறி, கோப்பையை இந்திய அணி தவறவிடுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
அப்படி இருக்கையில், தோனி கோப்பையை கைகளில் ஏந்திய அடுத்த இரண்டே வாரங்களில் ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் வெறுங்கையுடன் நாடு திரும்பும் போது, இயல்பாகவே ரசிகர்களின் மனதில் ஒப்பீடுகள் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா தோற்ற பிறகு சமூக வலைதளங்களில் எதிரொலிக்கிறது. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு ஐ.சி.சி. தொடரிலும் இந்திய அணி கோப்பையை வெல்ல முடியாமல் போவதை ரசிகர்கள் வேதனையுடன் நினைவு கூர்ந்துள்ளனர்.
தோனியை நினைவுகூரும் ரசிகர்கள்
ஐ.சி.சி. கோப்பைகளை அடுத்தடுத்து வென்று கொடுத்த தோனிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி என்று ஒரு ரசிகர் ட்வீட் செய்ய, மற்றொருவர், "ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக் கூடிய, இந்திய அணிக்கு தோனி தலைமையேற்றிருந்த அந்தக் காலத்திற்கு என்னைக் கூட்டிச் செல்லுங்கள் என்று ட்விட்டரில் புலம்பியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1

X பதிவின் முடிவு, 2
10 ஆண்டுகளாக தொடரும் சோகம்
2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு, ஒருநாள், இருபது ஓவர், டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை குறிப்பிட்டு ஒரு கிரிக்கெட் விமர்சகர் ட்வீட் செய்துள்ளார். அதே நேரத்தில், ஐ.சி.சி. தொடர்களில் நாக் அவுட் சுற்றில் அதே பழைய முடிவு என்று மற்றொரு ரசிகர் விமர்சித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3

X பதிவின் முடிவு, 4
ஐ.சி.சி. தொடர்களின் இறுதிப்போட்டிகளில் தோனி தலைமையில் விளையாடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கிய இந்திய கிரிக்கெட் அணி, மற்ற கேப்டன்கள் தலைமையில் 7 முறை இறுதிப்போட்டியில் களம் கண்டு ஒன்றில் மட்டுமே வென்றிருப்பதாக ஒரு ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
தோனிக்கு ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங் புகழாரம்
இந்திய அணியின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக மனக்குமுறலை வெளிப்படுத்தி வரும் நிலையில், கோலி தலைமையேற்றிருந்த போது இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளராக விளங்கிய ரவி சாஸ்திரியும் கூட தோனியை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றதற்காக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிக்கு பாராட்டுகளைத் தெரிவித்த ரவி சாஸ்திரி, ஐசிசி கோப்பைகளை வெல்வது அவ்வளவு எளிதானது அல்ல, மகேந்திர சிங் தோனி அதை எளிதானது போல் காட்டிவிட்டார் என்றும் பாராட்டு தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
இந்திய கிரிக்கெட் வீரர்கள், நிபுணர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி ரிக்கி பாண்டிங் போன்ற பிற நாட்டு ஜாம்பவான்களும் கூட தோனியை மனமுவந்து பாராட்டியுள்ளனர். "இந்திய அணிக்காக ஒருநாள், இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஐ.சி.சி. கோப்பைகளை வென்று காட்டிய தோனி இருந்த போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால், அதிலும் 2 கோப்பைகளை அவர் இந்தியாவுக்காக வென்று கொடுத்திருப்பார்" என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
தனி நபரை கொண்டாடுவதா? கம்பீர் காட்டம்
கிரிக்கெட் உலகில் இந்திய எல்லை கடந்து பலரும் தோனியை பாராட்டும் அதே வேளையில், தோனி தலைமையின் கீழ் விளையாடிய அனுபவம் பெற்ற முன்னாள் வீரர்கள் கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங் ஆகிய இருவரின் ட்வீட்களும் கிரிக்கெட் உலகில் அதிக கவனம் பெற்றுள்ளன.
"நம் நாடு ஒட்டுமொத்த அணி மீதன்றி, தனிப்பட்ட ஒரு வீரரின் மீது அபிமானம் கொண்டதாக இருக்கிறது. சில வீரர்கள் ஒட்டுமொத்த அணியைக் காட்டிலும் பெரியவர்கள் என்று எண்ணுகிறோம். இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தனிப்பட்ட வீரர்களைக் காட்டிலும் அணியே பெரிதாக மதிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை, ஒளிபரப்பு நிறுவனங்களில் இருந்து ஊடகங்கள் வரை கிரிக்கெட் தொடர்பான ஒவ்வொருவருமே வெறும் மக்கள் தொடர்பு நிறுவனங்களாக சுருங்கிவிட்டன. ஒரு நாள் முழுவதும் 3 பேரின் முகங்களை மட்டுமே அவை காட்டும். இரண்டு பேர் 50 ரன்கள் எடுத்தால், அதில் ஒருவரை மட்டும் பெரிதாகக் காட்டி மற்றொருவரின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள். இதனால் அந்த ஒருவரை மட்டுமே நட்சத்திரமாக ரசிகர்கள் எண்ணுகிறார்கள்." என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கவுதம் காம்பீர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங் அதிர்ச்சி ட்வீட்
ஆனால் ஹர்பஜன் சிங்கோ, தோனியைப் புகழ்ந்து ரசிகர் ஒருவர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் செய்திருந்த ட்வீட், மறைமுகமாக தோனியை சாடும் வகையில் இருக்கிறது.
"ஆமாம். அந்த போட்டிகளில் எல்லாம் அந்த இளைஞர், மற்ற 10 பேர் இல்லாமல் இந்தியாவுக்காக தனியாகவே விளையாடினார். உலகக்கோப்பைகளை அவர் தனியாகவே வென்று கொடுத்தார். ஆஸ்திரேலியாவோ மற்ற நாடுகளோ உலகக்கோப்பையை வெல்லும் போது அந்நாடுகள் வென்றதாகவே தலைப்புச் செய்திகள் வருகின்றன. ஆனால், இந்தியா வெல்லும் போது மட்டும் கேப்டன் வென்றதாக செய்திகள் வெளியாகின்றன. இது குழு விளையாட்டு. ஒன்றாகவே வெல்கிறோம், ஒன்றாகவே தோற்கிறோம்" என்று ஹர்பஜன் ட்வீட் செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 7
ஹர்பஜன் சிங்கை இந்த ட்வீட்டை ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஹர்பஜன் தரம் தாழ்ந்து விமர்சனங்களை முன்வைக்கக் கூடாது என்று கூறி, ஐ.பி.எல். போட்டியின் போது ஸ்ரீசாந்தை கன்னத்தில் அவர் அறைந்த சர்ச்சையை நினைவூட்டி அவர்கள் சாடி வருகின்றனர்.
தோனி vs கோலி கேப்டன்சி ஒப்பீடு
கோலி, ரோகித் ஆகியோருடன் ஒப்பிட்டு, அணித் தலைவராக தோனி ஒருமனதாக கொண்டாடப்படும் வேளையில் கேப்டனாக அவர்களின் செயல்பாடுகளை புள்ளிவிவரங்களைக் கொண்டு ஒப்பிட வேண்டியிருக்கிறது. குறிப்பாக, தோனி, கோலி ஆகியோர் கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்திருக்கிறது என்று பார்த்தால் புள்ளிவிவரங்கள் நமக்கு புதிய விவரத்தை சுட்டிக் காட்டுகின்றன.
ஒருநாள், இருபது ஓவர், டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட்டிலுமே தோனியை விட கோலியே அதிக வெற்றி சராசரியைக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை ஒட்டி இந்த ஒப்பீடு எழுந்திருப்பதால், டெஸ்ட போட்டிகளில் இருவரின் கேப்டன்சி செயல்பாடுகளை உற்று நோக்கினால் இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் காணப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
தோனி தலைமையில் 60 டெஸ்ட்களில் விளையாடியுள்ள இந்திய அணி 27 வெற்றி, 18 தோல்விகளுடன், 15 போட்டிகளை டிராவும் செய்துள்ளது. கேப்டனாக தோனியின் வெற்றி சராசரி 45% ஆகும்.
அதேநேரத்தில், கோலியை எடுத்துக் கொண்டால், 68 போட்டிகளில் 40 வெற்றி, 16 தோல்வி, 11 டிராக்களை கண்டுள்ளார். இந்திய அணிக்கு தலைமையேற்ற போட்டிகளில் சுமார் 59 சதவீத வெற்றியை ஒரு கேப்டனாக அவர் ருசித்துள்ளார். பேட்ஸ்மேனாக இந்திய அணிக்கு அவரது பங்களிப்பை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சச்சின், லாரா, பாண்டிங், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரை தாண்டி, டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் அவர் தான் என்ற ஒரு புள்ளிவிவரமே அதற்குப் போதும்.
சர்வதேச அளவில் தோனி லிமிடெட் ஓவர் போட்டிகளில்தான் எல்லா காலத்திலும் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஒருநாள், இருபது ஓவர் போட்டிகளுடன் ஒப்பிடுகையில், டெஸ்டில் ஒரு கேப்டனாகவும் சரி, வீரராகவும் சரி அவரது பங்களிப்பு சற்று குறைவுதான் என்பதை புள்ளிவிவரங்களே நமக்குக் காட்டுகின்றன.
ஆனால், கிரிக்கெட் உலகில் பெரிதாக மதிக்கப்படும் ஐ.சி.சி. உலகக்கோப்பையை ஒன்றல்ல, இரண்டு முறை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்தவர் அவர். கபில் தேவுக்குப் பிறகு இந்திய ரசிகர்களின் நீண்ட கால ஏக்கத்தைத் தணித்த அவருக்கு இந்திய கிரிக்கெட் உலகில் எப்போதுமே தனிச்சிறப்பான இடம் உண்டு.
களத்திலும், களத்திற்கு வெளியிலும் தோனியின் அணுகுமுறை, , அமைதி, தனித்துவமான செயல்பாடுகள், தைரியமான முடிவுகள் போன்றவை இந்திய ரசிகர்களால் மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படும்; அடுத்து வரும் ஒவ்வொரு கேப்டனின் செயல்பாடும், தோனியின் கேப்டன்சியுடன் ஒப்பிடப்பட்டுக் கொண்டே இருக்கும், அதனைத் தவிர்க்கவே முடியாது என்கிறார்கள் கிரிக்கெட் நிபுணர்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்