இஸ்ரேல் தாக்குதலுக்கு நடுவே காஸா மக்களின் ஒரு நாள் வாழ்க்கை எப்படி இருக்கும் ?

காணொளிக் குறிப்பு, சுமார் 22 லட்சம் மக்கள் வசித்த காஸா பகுதி 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் கொண்டது
இஸ்ரேல் தாக்குதலுக்கு நடுவே காஸா மக்களின் ஒரு நாள் வாழ்க்கை எப்படி இருக்கும் ?

சுமார் 22 லட்சம் மக்கள் வசிக்கும் காஸா பகுதி 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் கொண்டது. இது மத்தியதரைக் கடல், இஸ்ரேல் மற்றும் எகிப்தால் சூழப்பட்டுள்ளது.

1967-இல் போரின் போது இஸ்ரேலால் காஸா கைப்பற்றப்பட்டது. பின், இஸ்ரேல் 2005-இல் அங்கிருந்த தனது படைகளையும், அங்கு குடியேறியிருந்த சுமார் 7,000 மக்களையும் திரும்பப் பெற்றது.

காஸா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேலின் உள்கட்டமைப்பு அமைச்சர் காசாவிற்கான தண்ணீர் விநியோகத்தை துண்டித்தார்.

2007-இல் வன்முறைக்குப் பிறகு, அப்போதைய ஆளும் பாலத்தீன ஆணைய (PA) படைகளை வெளியேற்றிய இஸ்லாமிய ஆயுதக் குழுவான ஹமாஸ், காஸாவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

அப்போதிருந்து, இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகியவை பாதுகாப்புக் காரணங்களுக்காக, காஸாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பொருட்கள் மற்றும் மக்கள் செல்வதைக் கட்டுப்படுத்தியுள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)