ஹமாஸ் ஆயுதக்குழு: இஸ்ரேலுக்கு தலைவலியாக உள்ள இவர்கள் யார்?
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய கொடூர தாக்குதலை இஸ்ரேலிய உளவுத்துறை எப்படி கவனிக்கத் தவறியது என்று பிபிசி செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் கேட்டபோது, அவர்களிடம் இருந்து வந்த பதில், "இது எப்படி நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்பதுதான்.
இஸ்ரேல் உளவுத்துறை, உலகின் சிறந்த உளவு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் மொசாட் ஆகியவற்றையே ஏமாற்றி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவின் பின்னணி என்ன?
இஸ்ரேல் மீது இருபதே நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை வீசி அந்நாட்டையே அதிரச் செய்துள்ளது ஹமாஸ் அமைப்பு. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய நகரங்களில் பல இடங்கள் பற்றி எரிகின்றன.
ஹமாஸ் தாக்குதலுடன், ஆயுதக் குழுவினரும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலும் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளதால், 2021-ம் ஆண்டுக்குப் பிறகு அங்கே மீண்டும் பெரிய அளவிலான போர் தொடங்கியுள்ளது.
அமெரிக்க ஆதரவுடன் அதிநவீன ராணுவத்தை கட்டமைத்துள்ள இஸ்ரேலை அவ்வப்போது நிலைகுலையச் செய்யும் ஹமாஸ் அமைப்பின் வரலாற்றை விரிவாகப் பார்க்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



