மோன்தா புயல் பாதிப்பு - நிலவரத்தை காட்டும் 11 புகைப்படங்கள்
படக்குறிப்பு, மோன்தா புயலின் தீவிரத்தால் காக்கிநாடா அருகே கடற்கரைப் பகுதியில் கரை அரிக்கப்பட்டது, கடற்கரை அருகில் உள்ள சில வீடுகளும் சேதமடைந்தன.
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் ஆந்திராவில் மச்சிலிப்பட்டினம் மற்றும் காக்கிநாடா இடையே நர்சபூர் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை கரையைக் கடந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மோன்தா புயல் ஏற்படுத்திய பாதிப்பை காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நெல்லூரில் பல சாலைகள் மழைநீரால் வெள்ளத்தில் மூழ்கின
பட மூலாதாரம், facebook.com/andhrapradeshweatherman2
படக்குறிப்பு, திருப்பதியில் பெய்த கனமழையால் பக்தர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்
பட மூலாதாரம், x.com/IPR_AP
படக்குறிப்பு, ஆந்திராவில் புயலால் அந்தர்வேதி, பல்லேபாலம், காசுடாசுபாலம் உள்ளிட்ட இடங்களில் சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் பிற பொருட்களை மீட்பு படையினர் அகற்றினர்
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, ஆந்திராவின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் வீதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, அரக்கு என்கிற ஊரில் போரா மற்றும் சிமிடிபள்ளி இடையேயான 100 மீட்டர் நீள ரயில் பாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
படக்குறிப்பு, உப்படா என்கிற ஊரில் பெரிய அலைகள் தாக்கிய பிறகு சாலையில் கற்கள் நிறைந்து காணப்படுகிறது.
படக்குறிப்பு, விசாகப்பட்டினத்தில் உள்ள யாரடாவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காற்றினால் சென்னை கடற்கரையில் பெரிய அலைகள் உருவாகின
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, புயல் கரையைக் கடந்த பிறகு, சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இளைஞர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டதைக் காண முடிந்தது.
பட மூலாதாரம், Subrat Kumar Pati
படக்குறிப்பு, ஒடிசாவில் சூறாவளி காற்றால் வேரோடு சாய்ந்த மரங்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அகற்றினர்