கனடா: தீப்பிடித்து தலைகீழாக கவிழ்ந்த விமானம் - உள்ளே இருந்த 80 பேரும் உயிர் தப்பியது எப்படி? (காணொளி)
கடந்த திங்கட்கிழமை கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் தரையிறங்கிய போது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விமானம் தீப்பிடித்து தலைகீழாக கவிழ்ந்த போதும், அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்தனர். பெரும்பாலானோர் காயமின்றியும் தப்பினர். பயணிகள் தாம் தப்பித்த அனுபவங்கள் குறித்து ஆச்சர்யத்துடன் விவரித்தனர்.
என்ன நடந்தது? தலைகீழாக கவிழ்ந்த போதும் உயிர் தப்பியது எப்படி? சற்று விளக்கமாக இந்த காணொளியில் பார்க்கலாம்.
கடந்த பிப்ரவரி 17-ம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா நகரிலிருந்து 76 பயணிகள் மற்றும் விமான குழுவினர் உட்பட 80 பேருடன், கனடாவின் டொரண்டோ வந்த டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் (DL4819) தரையிறங்கும் போது கவிழ்த்து விபத்துக்குள்ளானது.
உள்ளூர் நேரப்படி மதியம் இரண்டு மணிக்கு நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை பார்க்கும்போது, ஓடுதளத்தில் மோதி சறுக்கிக் கொண்டே சென்று, விமானம் தீ பிடித்த நிலையில், ஒரு கட்டத்தில் கவிழ்ந்தது தெரியவருகிறது.
இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்தாலும் 19 பேர் அன்றைய தினமே உள்ளூர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



