அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பு: 'அதே இடத்தில் எங்களை புதைத்தது போன்று உள்ளது' - பிபிசி கள ஆய்வு
சென்னை பல்லாவரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அனகாபுத்தூர். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட இப்பகுதியில் அடையாறு கரையோரம் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன.
அடையாறில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து அந்தப் பகுதியில் நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற சூழலை உருவாக்குவதற்காக இங்குள்ள வீடுகளை அகற்றுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
மே 21 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள், தாய் மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு, ஸ்டாலின் நகர், காயிதே மில்லத் நகர் ஆகிய நான்கு பகுதிகளில் உள்ள வீடுகளை இடிக்கும் பணிகள் நடந்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை வலுக்கட்டாயமாக காவல்துறை வெளியேற்றியது. பிறகு அவர்களின் வீடுகளும் முழுமையாக இடிக்கப்பட்டன. இதனைப் பார்த்து மக்கள் கதறியழுத காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது.
பிபிசி தமிழ் களத்துக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் பேசியது.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



