தெற்கு சூடானில் மீண்டும் உள்நாட்டுப் போர் மூளும் அபாயம் - எச்சரிக்கும் ஐ.நா

காணொளிக் குறிப்பு,
தெற்கு சூடானில் மீண்டும் உள்நாட்டுப் போர் மூளும் அபாயம் - எச்சரிக்கும் ஐ.நா

உலகின் இளம் நாடான தெற்கு சூடானில் மீண்டும் ஒரு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிபர் சல்வா கிர் மற்றும் அவரின் முதல் துணை அதிபர் ரியேக் மசார் இருவரும் சமீபத்தில் நடைபெற்ற திட்டமிட்ட தாக்குதலில் தொடர்பு இருப்பதாக ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

சமீபத்தில் அப்பர் நைலில் ராணுவத்துக்கும் ஆயுதமேந்திய குழுவுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு உள்நாட்டுப் போராக வெடிக்க வாய்ப்புகள் இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

இதற்கான காரணம் என்ன? தெற்கு சூடானில் பதற்றம் அதிகரிப்பது ஏன்? முழு விவரம் இந்த வீடியோவில்...

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு