இலங்கைக்கான நிதியை நிறுத்தும் அமெரிக்கா, என்ன பாதிப்பு?

காணொளிக் குறிப்பு, USAID இடைநிறுத்தத்தால் இலங்கைக்கு என்ன பாதிப்பு?
இலங்கைக்கான நிதியை நிறுத்தும் அமெரிக்கா, என்ன பாதிப்பு?

அமெரிக்காவால் வழங்கப்படுகின்ற நிதி தொடர்பான வெளிநாட்டு திட்டத்தை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்கும் வகையிலான ஆவணத்தில், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த உத்தரவுக்கு அமைய, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் USAID அமைப்பால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் USAID-ஆல் நடத்திச் செல்லப்படுகின்ற அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளிட்ட தளங்கள் செயலிழந்துள்ளன.

கூடுதல் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)