கூட்ட நெரிசல், தடியடி, மயங்கிய ரசிகர்கள் - ஆர்சிபி கொண்டாட்டத்தில் நடந்ததை விவரிக்கும் புகைப்படங்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பெங்களூரு கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்த சிறுவனுக்கு காவலர் ஒருவர் உதவுகிறார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர் சி பி) அணி ஐபில் கோப்பையை வென்றதை அடுத்து பெங்களூருவில் வெற்றிவிழாக் கூட்டம் நடைபெற்ற சின்னசாமி மைதானத்துக்கு அருகில் நெரிசலில் சிக்கி குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 33 காயமடைந்ததாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.
படக்குறிப்பு, சின்னசாமி மைதானத்துக்கு அருகே கூடியிருந்த கூட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி நடத்திய காட்சிகளை ஏ என் ஐ செய்தி முகமை வெளியிட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மைதானத்தில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் உள்ளே நிற்பதற்கு இடம் இல்லாதவர்கள் வெளியே வர முயன்ற போது, வாயில் கதவுகள் மூடப்பட்டிருந்ததாகவும், கதவுகளை திறந்தால் வெளியில் இருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளே வர முயல்வார்கள் என்றும் ஆர் சி பி ரசிகை ஒருவர் நிகழ்விடத்தில் நடந்ததை விவரித்திருந்தார்.
படக்குறிப்பு, ஆர் சி பி அணியினர் 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐ பி எல் கோப்பையை வென்றதை அடுத்து பெங்களூருவில் ரசிகர்கள் நேற்று உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விதான் சவுதா அருகே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர் சி பியின் வெற்றியைக் கொண்டாட குவிந்திருந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆர் சி பி அணியினருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் கர்நாடக அரசும் உற்சாக வரவேற்பு அளித்தது. விராட் கோலி உள்ளிட்ட பெங்களூர் அணியின் வீரர்கள் கோப்பையுடன் நேற்று (ஜூன் 4) மதியம் பெங்களூர் வந்தடைந்த போது, அவர்களை கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.
படக்குறிப்பு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி கே சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் கர்நாடக அரசு சார்பாக ஆர் சி பி அணியினருக்கு விதான் சவுதாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விதான் சவுதா நிகழ்வுக்கு பிறகு, பெங்களூரூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆர் சி பி அணியினருக்கு வெற்றி விழாக் கூட்டம் மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சின்னசாமி மைதானத்தின் வாயில்கள் திறக்கப்படாமல் இருந்ததாகவும் சிறிய நுழைவாயில் வழியாக பலரும் உள்ளே நுழைய முயன்றதால் நெரிசல் ஏற்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த நிகழ்வு திடீரென ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதிக மக்கள் கூட்டம் வரும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
படக்குறிப்பு, சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆர்சிபி வெற்றியைக் கொண்டாட பெங்களுரு சின்னசாமி ஸ்டேடியத்தில் திரண்டிருந்த ரசிகர்கள்
படக்குறிப்பு, ஆர்சிபி வெற்றியைக் கொண்டாட பெங்களுரு சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே திரண்டிருந்த ரசிகர் கூட்டத்தில் ஒருவர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.