ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் நெரிசல் ஏற்படக் காரணம் என்ன? - முதலமைச்சரின் பதில் என்ன?
ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதையடுத்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வீரர்களை கௌரவிக்க அரசு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர்.
அப்போது மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, "இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்" என்று கூறினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு









