ஜப்பானில் விபத்தில் முடிந்த பட்டாசு திருவிழா

காணொளிக் குறிப்பு, ஜப்பானில் விபத்தில் முடிந்த பட்டாசு திருவிழா
ஜப்பானில் விபத்தில் முடிந்த பட்டாசு திருவிழா

ஜப்பானில் வானவேடிக்கை திருவிழாவின்போது பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த படகுகளில் தீப்பற்றியது.

யோகோஹாமாவில் நடந்த இந்த திருவிழாவில் 20,000 வானவேடிக்கைகளை 25 நிமிடங்களில் வெடிக்க வைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் திடீரென படகில் தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்துச்சிதறின. படகில் இருந்த ஊழியர்கள் ஐந்து பேர் கடலில் குதித்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டதாக ஜப்பானிய அரசு ஊடகமான NHK தெரிவித்துள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு