காணொளி: ஐஃபிள் டவரில் சைக்கிளிலேயே ஏறி உலக சாதனை
ஐஃபிள் கோபுரத்தின் மொத்த படிகளில் 686 படிகளை சைக்கிளிலேயே ஏறி டிக்டாக் பிரபலம் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆரேலியன் ஃபோண்டெனாய் என்பவர் படிக்கட்டுகள் வழியாக அணுகக்கூடிய உயரமான இரண்டாவது தளத்துக்கு, 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் அவரது கால் தரையில் படாமல் சைக்கிளில் ஐஃபிள் கோபுரத்தை எறியுள்ளார்.
2002 ஆம் ஆண்டு செய்யப்பட்ட முந்தைய சாதனையை விட சுமார் ஏழு நிமிடங்கள் குறைவான நேரத்தில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
"தோள்கள் மற்றும் கால்கள் மிகவும் வலிக்கின்றன. பெடல் செய்யாமல் சைக்கிளில் இரண்டாவது தளம் வரை ஏறுவது கடினமானது என நினைத்தேன். எப்போது பிரேக் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 686 படிகளை சைக்கிள் கொண்டு ஏறுவது கால் தசைகள் மற்றும் தோள்களை மிகவும் பாதிக்கும். ஆனால் அதை நான் செய்து முடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



