சௌதி மற்றும் இரானின் ஆதிக்கப் போட்டிக்குக் காரணம் ஷியா, சுன்னி பிரிவுகளா? - காணொளி
சுன்னி மற்றும் ஷியாக்கள் - இது இஸ்லாமிய உலகின் மிகப்பெரிய பிளவு.
இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான தற்போதைய போர் சூழலில் பாலத்தீனத்துக்கு ஆதரவளித்தாலும், மத்திய கிழக்கில் உள்ள பாரம்பரிய அரசியல் மற்றும் மதப் பதற்றங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.
இஸ்லாமின் இரண்டு கிளைகளுக்கு இடையேயான வேறுபாடுகளே மத்திய கிழக்கில் உள்ள முக்கிய இரண்டு போட்டியாளர்களான சௌதி அரேபியா மற்றும் இரான் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான உறவுகளுக்கு காரணமாகும்.
இரு நாடுகளும் பிராந்திய ஆதிக்கத்திற்கான தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன, மேலும் இந்த பல தசாப்தங்களாக நீடித்த தகராறு மத பிரிவினையினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரான் ஷியா இஸ்லாத்தையும், சௌதி அரேபியா சுன்னி இஸ்லாத்தையும் பின்பற்றுகின்றன.
காஸாவில் நடைபெறும் தற்போதைய மோதலிலும் இந்த வேறுபாடுகள் பிரதிபலித்தன. இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையேயான உறவுகள் சீரமைவதை தவிர்க்கும் முயற்சியாகவே ஹமாஸின் அக்டோபர் 7ஆம் தேதி திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதாக பல நிபுணர்கள் கருதுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



