மோதி ஆட்சியில் இந்தியா கண்ட 8 முக்கிய மாற்றங்கள் என்னென்ன? - காணொளி
கடந்த 10 ஆண்டுகளில், மோதி தலைமையிலான பாஜக அரசு, மத்தியிலும், தான் ஆளும் பல்வேறு மாநிலங்களிலும் மிகப்பெரிய சட்ட மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. காலனித்துவ கால விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு பதிலாக அல்லது அதில் மாற்றம் செய்யும் வகையில் சட்டங்களை இயற்றியுள்ளது பாஜக.
அதில் பல சட்டங்கள் மக்களின் உரிமைகளை மறுக்கின்றன, இன்னும் சில சட்டங்கள் அரசாங்கத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன என எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
மாற்றப்பட்ட அல்லது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சில முக்கிய சட்டங்கள் குறித்தும், அவை மக்களின் அன்றாட வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன அல்லது இனி ஏற்படுத்தலாம் என்பதைக் குறித்தும் இந்தக் காணொளியில் பார்க்கலாம். 10 ஆண்டு மோதி ஆட்சியில் கண்ட 8 முக்கிய மாற்றங்கள் என்ன என்பதை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



