ஃபைக்கா ரியாஸ்: தடைகளை உடைத்து ஒலிம்பிக்ஸில் நுழைந்த இளம் பாகிஸ்தான் வீராங்கனை
ஃபைக்கா ரியாஸ், பாகிஸ்தானில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 11.70 வினாடிகளில் தேசிய சாதனை படைத்த அதிவேக தடகள வீராங்கனை.
அவர் அர்ஷத் நதீமுக்கு பிறகு பாகிஸ்தானின் சிறந்த தடகள வீராங்கனையாக ஒலிம்பிக் போட்டிகளில் வைல்ட் கார்டு நுழைவைப் பெற்றுள்ளார்.
பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்கிறார். ஃபைக்கா ஒரு ஹாக்கி வீரராகத் தனது விளையாட்டு வாழ்வைத் தொடங்கினார். 2016இல் பாகிஸ்தான் மகளிர் அணி முகாமில் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு ஹாக்கியில் இருந்து மாறி தடகளத்தில் தனது கவனத்தைச் செலுத்தினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு, அவர் தடகளத்தில் பங்கேற்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இருப்பினும், இப்போது அவர் ஒலிம்பிக்கில் நுழைந்திருக்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



