டெல்லி விமான நிலைய மேற்கூரை விபத்து, பலியானவரின் குடும்பத்தின் நிலை என்ன?
டெல்லியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் விமானநிலையத்தின் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் நடந்த போது ரமேஷ் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருப்பு பகுதியில் பயணிகளுக்காக காத்திருந்தார். அவர் மீது கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
ரமேஷ் மரணமடைந்தது குறித்து அவரின் குடும்பத்துக்கு மாலையில் தான் தெரிவிக்கப்பட்டது.
டெல்லி ரோகிணி பகுதியில் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்த ரமேஷ் குமார், வாடகைக்கு கார் எடுத்து ஓட்டி வந்தார். கடந்த பத்தாண்டுகளாக டாக்ஸி ஓட்டி வந்த ரமேஷ்குமார் வழக்கம்போல் காலையில் வேலைக்குச் சென்றார்.
அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளதாக காலை ஏழு மணியளவில் காரின் உரிமையாளர் உமேத் சிங்குக்கு டெல்லி காவல்துறையில் இருந்து அழைப்பு வந்தது.
உமேத் சிங் டெர்மினல் 1-க்கு சென்றார். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக அந்த இடத்தை அடைய முடியவில்லை.
"ரமேஷ் இறந்தது குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால் என்னால் அவரது உடலை பார்க்க முடியவில்லை," என்று உமேத் சிங் கூறினார்.
ஆனால் ரமேஷின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைக்கவில்லை.
“என் தந்தை சுயநினைவிழந்துவிட்டதாக காலை சுமார் 8:30 மணியளவில் டெல்லி போலீசார் தெரிவித்தனர்,” என்று ரமேஷின் மகன் ரவீந்தர் சிங் குறிப்பிட்டார்.
ரமேஷ் இறந்த தகவல் மாலை 4:00 மணியளவில் அவரது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.
“என் தந்தையின் மரணம் குறித்து டெல்லி போலீசார் எங்களிடம் கூறவில்லை. பல மணி நேரம் நான் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தேன். என் தந்தையின் உடல் சப்தர்ஜங் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக மாலை நான்கு மணிக்கு எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று ரவீந்தர் அழுது கொண்டே கூறினார்.
மேலும் விவரம் காணொளியில்.

பட மூலாதாரம், ANI

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



