விரும்பிய கட்டணத்தை நோயாளிகள் உண்டியலில் செலுத்தலாம் - மருத்துவ தம்பதியின் சேவை முயற்சி

காணொளிக் குறிப்பு, திருப்பூரில் குழந்தைகள் நல கிளினிக்கில் மருத்துவராக இந்துப்பிரியா பணியாற்றி வருகிறார்
விரும்பிய கட்டணத்தை நோயாளிகள் உண்டியலில் செலுத்தலாம் - மருத்துவ தம்பதியின் சேவை முயற்சி

திருப்பூர் 60 அடி சாலையில் இயங்கிவரும் குழந்தைகள் நல கிளினிக்கில் மருத்துவர் இந்துப்பிரியா, சிகிச்சை பெற வருபவர்கள் தங்களின் விருப்பப்படி கட்டணம் செலுத்தும்வகையில், “Pay As You Wish” என்ற முறையில் கட்டணம் வசூலித்து வருகிறார்.

அதற்கென ஓர் உண்டியலை வைத்திருக்கிறார். அதன்படி, மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற்றுச் செல்லும் ஒவ்வொருவரும் தங்களது கையிருப்பு பணத்துக்கு ஏற்றாற்போல கட்டணத்தை உண்டியலில் செலுத்திவிட்டு செல்கின்றனர். யார், எவ்வளவு போடுகிறார்கள்? என்றெல்லாம் யாரும் கண்காணிப்பதில்லை.

இவரது கணவர் கீர்த்தி தியாகராஜன் எலும்பு மூட்டு மருத்துவர் ஆவார். இவர், 30 ரூபாய் கட்டணத்தில்தான் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தன் தந்தைக்கு மருத்துவ செலவுகளுக்காக தங்கள் குடும்பத்தினர் பட்ட சிரமத்தைப் பிறர் படக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இந்த சேவையை செய்து வருவதாக அவர் கூறுகிறார்.

மருத்துவம் போக மருந்து மற்றும் பிற சேவைகளுக்கும் குறைந்த கட்டணத்தை இவர்கள் பெற்று வருகின்றனர்.

செய்தியாளர்: கலைவாணி பன்னீர்செல்வம்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: மதன் பிரசாத்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)