இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற இரானின் நன்னடத்தைக் காவலர்கள் - காணொளி

காணொளிக் குறிப்பு, இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற இரானின் நன்னடத்தைக் காவலர்கள் - காணொளி
இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற இரானின் நன்னடத்தைக் காவலர்கள் - காணொளி

இரானில் நன்னடத்தைக் காவலர்களிடமிருந்து இந்த இரு இளம்பெண்களும் ஓடி ஒளிய முயற்சிக்கின்றனர். ஜூன் 21 அன்று பதிவானதாகக் கூறப்படும் இந்த சிசிடிவி காட்சி சமீபத்தில் வைரலானது.

இந்த அதிகாரிகள் பலவந்தமாக நடந்துகொண்டதாக அப்பெண்களுள் ஒருவரின் தாயார் வழக்கு தொடர்ந்ததையடுத்து, அந்த வீடியோ குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என இரான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த வேன் நின்றவுடன், அதிலிருந்து அதிகாரிகள் இறங்கி அப்பெண்களை நோக்கி ஓடிவந்தனர். இரு பெண்களுள் ஒருவர் வேனுக்குள் கொண்டு செல்லப்பட்டார், மற்றொரு பெண் அதிகாரிகளைத் தடுக்க முயன்றார்.

அதிகாரிகளைத் தடுக்க முயன்ற பெண்ணுக்கு ‘லேசான காயங்கள்’ ஏற்பட்டதாகவும் அதிகாரிகளின் நடத்தை விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லையென்றும் இரான் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் இரான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெஸ்ஷ்கியான், ‘ஹிஜாப் அணிவதை வலுக்கட்டாயமாகத் திணிப்பதை’ நிறுத்துவதாக உறுதிபூண்டார். தற்போது அவருடைய தேர்தல் வாக்குறுதியை சமூக ஊடகங்களில் பலரும் நினைவூட்டி வருகின்றனர்.

இரானின் நன்னடத்தைக் காவலர்கள்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)