"ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: மிக மோசமான ஏற்பாடு" - கொந்தளித்த ரசிகர்கள்
ஏ.ஆர். ரஹ்மான் சென்னைக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமையன்று நடத்திய இசை நிகழ்ச்சி மிக மோசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக, அந்த நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அளவுக்கு அதிகமாக டிக்கெட்கள் விற்கப்பட்டதாகவும், எந்த ஒழுங்கான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றும் பலரும் புகார் தெரிவிக்கின்றனர். இதில் எங்கே தவறு நடந்தது?
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 30 ஆண்டுக்கால இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்று கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் மழை பெய்ததால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
அதற்குப் பிறகு, செப்டம்பர் 10ஆம் தேதியன்று சென்னைக்கு அருகில் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால், இந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றவர்கள், தாங்கள் உள்ளே நுழைய முடியவில்லை என்பதோடு, போக்குவரத்து நெரிசலிலும் கூட்ட நெரிசலிலும் சிக்கிக்கொண்டதாக சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்தனர். பலர் வீடியோக்களையும் வெளியிட்டனர்.

பட மூலாதாரம், A.R.RAHMAN/TWITTER
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



