காஸாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் – நோயாளிகளின் நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, காஸா மருத்துவமனைகளைத் தாக்கும் இஸ்ரேலின் – தீவிரமாகும் மனிதாபிமானச் சிக்கல் – வீடியோ
காஸாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் – நோயாளிகளின் நிலை என்ன?

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு காஸாவில் உள்ள மருத்துவமனைகளும் இலக்காகியுள்ளன.

காஸாவில் குறைந்தது 4 முக்கியமான மருத்துவமனைகள் இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான நோயாளிகள், இந்த மருத்துவமனைகளுக்குள் சிக்கியுள்ளனர்.

காஸாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல் ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேலிய படையினர் குண்டு வீசி தாக்கியதாக பாலத்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவனையில் உள்ள நோயாளிகள், மருத்துவர்களின் நிலைமை கவலையளிப்பதாக பிபிசி செய்தியாளர் ருஷ்டி அபுஅலூஃப் கூறியுள்ளார்.

அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது தொடர்ச்சியான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.

காஸா

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)