வெப்ப அலையால் மடியும் விலங்குகளைக் காப்பாற்ற இளைஞர்கள் புதிய முயற்சி - காணொளி

காணொளிக் குறிப்பு, வறண்டு போன அணை - விலங்குகளை காப்பாற்ற முன்வந்த இளைஞர்கள்
வெப்ப அலையால் மடியும் விலங்குகளைக் காப்பாற்ற இளைஞர்கள் புதிய முயற்சி - காணொளி

வட இந்தியாவில் அதீத வெப்ப அலையால் பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், விலங்குகள் உயிர் பிழைப்பதும் கடினமாகியுள்ளது. புதிய சண்டிகர் அருகே ஷிவாலிக் குன்றுகளில் அமைந்துள்ள பெர்ச் அணை முழுவதும் வறண்டுவிட்டது.

இங்குள்ள வனவிலங்குகளுக்கு இந்த அணைதான் ஒரே குடிநீர் ஆதாரமாக இருந்தது. தற்போது அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அந்த விலங்குகளின் தாகத்தைத் தீர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த இளைஞர்கள் தண்ணீர் டேங்க்குகளை தினமும் இங்கு கொண்டு வந்து, விலங்குகளின் தாகத்தைத் தீர்க்கின்றனர்.

பெர்ச் அணை மழையால் நிரம்பும் அணையாகும். இங்குள்ள விலங்குகள், வற்றிப்போன குளங்களில் அடிக்கடி சிக்கிக்கொண்டு, நாய்களால் தாக்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் இளைஞர்கள் சிலர் இந்த விலங்குகளுக்கு உதவ முன்வந்தனர், பின்னர் அதுவே மெல்ல மெல்ல ஒரு சமூக இயக்கமாக மாறியது.

பஞ்சாப் அரசின் நீர்ப்பாசன துறை (கால்வாய்கள்) முதன்மை பொறியாளர், இந்த அணையிலிருந்து வண்டலை தூர்வாராததே தற்போதைய இந்த நிலைக்குக் காரணம் என்று பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். மழைநீருடன் வண்டலும் கலந்து வருவதால், அணையில் வண்டல் குவிந்துள்ளதாகவும் விரைவில் அணை தூர்வாரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)