காணொளி: பாலியல் சீண்டல் என்ற வீடியோவால் தற்கொலை செய்துகொண்ட நபர் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, கேரளா
காணொளி: பாலியல் சீண்டல் என்ற வீடியோவால் தற்கொலை செய்துகொண்ட நபர் - என்ன நடந்தது?

கேரளாவில் ஓடும் பேருந்தில் தன்னை பாலியல் நோக்கத்துடன் ஒருவர் சீண்டியதாக, பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் காணொளியை பதிவிட்டார். அதைத் தொடர்ந்து இந்த நபர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. உயிரிழந்த நபரின் தாய் அளித்த புகாரின் பேரில், காணொளி வெளியிட்ட பெண் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பத்தில் இதுவரை நடந்தது என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு