சச்சின் முழு உருவச்சிலை மும்பை வான்கடே அரங்கில் திறப்பு - வீடியோ
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சின் டென்டுல்கரின் முழு உருவச் சிலை மும்பையின் வான்கடே அரங்கில் நிறுவப்பட்டுள்ளது.
சச்சின் ஒரு சிக்சரை விளாசிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சச்சினின் 50-வது பிறந்தநாளையொட்டி அவரது சொந்த மண்ணான மும்பையில் இந்தச் சிலை நிறுவப்பட்டு அவருக்கு கௌரவம் செய்யப்பட்டுள்ளது.
சிலை திறப்பு விழாவில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பி.சி.சி.ஐ செயலர் ஜெய் ஷா, முன்னாள் பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி தலைவர் சரத் பவார், சச்சின் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது தனது கிரிக்கெட் பயணத்தில் உடன் இருந்தவர்களுக்கு இந்த சிலையை அர்ப்பணிப்பதாக சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



