வறட்சிக்கு நடுவில் லட்சியத்தோடு போராட்டம் புனே மாணவர்கள்

காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் கடும் வறட்சிக்கு நடுவே தங்களது லட்சியத்திற்காக புனே வரை வந்து மாணவர்கள் படிக்கிறார்கள்.
வறட்சிக்கு நடுவில் லட்சியத்தோடு போராட்டம் புனே மாணவர்கள்

புனேவில் உள்ள ஒரு கல்லூரியில் ஜோத்ஸ்னா பதினென்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறந்த கல்வியை பெறவேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு நெடுந்தொலைவில் உள்ள புனேவில் ஜோத்ஸ்னா தங்கி படிக்கிறார்.

அவரின் அம்மா, தாத்தா- பாட்டி ஆகியோர் சொந்த ஊரான பீட் மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோத்ஸ்னாவின் தந்தை இறந்துவிட்டார். அதன்பிறகு அவரின் தாய்தான் குடும்ப பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

விவசாயம் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் வீட்டு செலவுகளை சமாளித்து வருகிறார். இந்த ஆண்டு வறட்சியின் காரணமாக போதிய விளைச்சல் இல்லை. இதனால் அவர் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. இவரைப் போல் வீட்டில் இருந்து நெடுந்தூரத்தில் தங்கிப்படிக்கும் பல மாணவர்கள் மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)