"அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது" - டிரம்ப் அதிபரானதும் பேசியது என்ன?
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்று ஆற்றிய முதல் உரையில் "அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது" என்று பேசினார்.
அமெரிக்காவில் அரசு கொள்கையின் படி இனி ஆண்-பெண் இரு பாலின வகைப்பாடு மட்டுமே இருக்கும், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்கிறது, மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் குடியேறுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டின் தெற்கு எல்லையில் அவசர நிலை பிரகடனம் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அவர் முதல் நாளில் பிறப்பித்தார்.
தேர்தல் பிரசாரத்தின் போது அவரை குறி வைத்த துப்பாக்கிச் சூட்டை குறிப்பிட்டு பேசிய அவர், அவர் உயிர் தப்பியதற்கு ஏதோ காரணம் இருக்கிறது என்று பேசினார்.
ஜோ பைடன் தலைமையிலான முந்தைய அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து பேசியவர், அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது என்றும், பிற நாடுகள் மீது வரி மற்றும் கட்டணங்கள் விதித்து அமெரிக்கர்களை வளப்படுத்துவோம் என்றார். போர்களின் மூலம் வெற்றியின் மூலம் அல்லாமல் போர்களை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலமும், போர்களில் ஈடுபடாமல் இருப்பதன் மூலமும் வெற்றியை அளவிட வேண்டும் என்று பேசிய அவர், அமைதியை ஏற்படுத்தும் நபராகவும் அனைவரையும் ஒன்றிணைக்கும் நபராகவும் இருக்க விரும்புவதாக தெரிவித்தார்.
டிரம்ப் உரையின் முக்கிய அம்சங்கள் விரிவாக காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



