தைவானைச் சுற்றிலும் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை குவித்த சீனா - என்ன செய்கிறது?

காணொளிக் குறிப்பு, தைவானைச் சுற்றிலும் 9 இடங்களில் போர் ஒத்திகையை சீனா நடத்துகிறது
தைவானைச் சுற்றிலும் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை குவித்த சீனா - என்ன செய்கிறது?

சீனா திடீரென தைவானை சுற்றி வளைத்து போர் ஒத்திகையை நடத்தி வருவது அந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. தைவானைச் சுற்றிலும் 9 இடங்களில் போர் ஒத்திகையை சீனா நடத்துகிறது.

சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தைவான், ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் உறுதி செய்ய தேவையான படைகளை அனுப்பியிருப்பதாக கூறியுள்ளது.

தைவான் தீவு ஒன்றுக்குள் ஊடுருவ முயன்ற சீனர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

தைவான் தனது படைகள் தயார் நிலையில் இருப்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் ஜாயின்ட் ஸ்வார்ட் 2024பி என்ற பெயரில் போர் ஒத்திகையை சீனா தொடங்கியுள்ளது. தைவான் மீது தாக்குதல் நடத்துவதை உருவகப்படுத்தி, 9 இடங்களில் ஒத்திகை நடத்தப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

தைவான் தீவைச் சுற்றிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட சீன கடலோர காவல்படையும் சில கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.

7 கடற்படை போர்க் கப்பல்கள், 25 போர் விமானங்கள் மற்றும் 4 கப்பல்கள் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக தைவான் தெரிவித்துள்ளது.

சீனாவின் நடவடிக்கையை கண்டித்திருந்த தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சீனா இந்த பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழலை பலவீனப்படுத்துவதாகவும், சர்வதேச விதிகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நேரடியாக மோதல் ஏற்படும் வராமல் இருக்கும் வகையில் செயல்படுமாறும் அதன் படைகளை கேட்டுக் கொண்டுள்ளது.

சீன ஏவுகணைகளின் நகர்வை ராணுவ புலனாய்வுப் பிரிவு உன்னிப்பாக கண்காணித்து வரும் நிலையில், அனைத்து படைப் பிரிவுகளும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தைவானின் பாதுகாப்பு மண்டலங்கள் உச்சபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், போர்க் கப்பல்களும் போர் விமானங்களும் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவிடம் இருந்து வர வாய்ப்புள்ள எந்தவொரு தவறான தகவல் குறித்தும் விழிப்புடன் இருக்குமாறு குடிமக்களை தைவான் கேட்டுக் கொண்டுள்ளது.

தைவானைச் சுற்றி சீனா மேற்கொண்டுள்ள ராணுவ ஒத்திகையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.

தைவான் அதிபர் லாயின் வழக்கமான பேச்சுக்குப் பிறகான சீனாவின் இந்த ஒத்திகையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும், அந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் சீர்கெடும் வகையில் சீனா நடந்து கொள்ளக் கூடாது என்று பைடன் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

"தைவான் நீரிணை மற்றும் அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்கெடச் செய்யும் எந்தவொரு நடவடிக்கைகளையும் சீனா தவிர்க்க வேண்டும். அதுவே, பிராந்திய அமைதி மற்றும் வளத்திற்கு அத்தியாவசியமானது" அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)