உத்தர பிரதேசம்: பாதி கட்டிய பாலத்தில் விழுந்த கார், மூவர் பலி - கூகுள் மேப் காரணமா?
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் நடந்த கார் விபத்து தொடர்பாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து அளிக்கப்பட்ட புகாரில் கூகுள் மேப்ஸின் மண்டல மேலாளரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கவனக் குறைவின் காரணமாக மூன்று இளைஞர்கள் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தனர்.
இவர்கள் கூகுள் மேப்ஸின் வழிக்கட்டுதல்களின்படி அங்குள்ள பாலத்தின் மீது காரை ஓட்டிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. அந்த பாலம் முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லை. இதனால் அதில் சென்று கொண்டிருந்த கார் கீழே விழுந்தது. இந்த விபத்தில் என்ன நடந்தது?
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



