காணொளி: சிறுவனை தாக்கிய குரங்கு சிசிடிவியில் பதிவான காட்சி
காணொளி: சிறுவனை தாக்கிய குரங்கு சிசிடிவியில் பதிவான காட்சி
குஜராத்தில் குடியிருப்பு பகுதியில் 5 முதல் 6 பேரைத் தாக்கிய குரங்கு ஒன்று பிடிபட்டது. வடோடராவின் நீலாம்பர் சொசைட்டி பகுதியில் இந்தக் குரங்கின் காரணமாக மக்கள் அச்சத்தில் இருந்தனர். சமீபத்தில், சொசைட்டியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது குரங்கு தாக்கிய காட்சி சிசிடிவியில் பதிவானது.
இதன் பின்னர், குரங்கை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் கூண்டு அமைத்தனர். கூண்டில் சிக்கிய குரங்கை வனத்துறை அதிகாரிகள் பிடித்து கொண்டுசென்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



