மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாய்லாந்தில் குலுங்கிய பார்

காணொளிக் குறிப்பு,
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாய்லாந்தில் குலுங்கிய பார்

மியான்மரில் 7.7 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தை மியான்மரில் ஏற்படுத்தியுள்ளது. இதனால் 2000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் மியான்மர் மட்டுமல்லாமல் அருகில் உள்ள இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பார் ஒன்று மியான்மர் நிலநடுக்கத்தால் குலுங்கிய காட்சிகளை இந்த வீடியோவில் காணலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)