தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பஹல்காம் இப்போது எப்படி இருக்கிறது?

பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், ANI

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்துக்கு விரைந்தது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் அப்பகுதிக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அந்த மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

துணை ராணுவத்தினர் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களில் ரோந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலுக்குப் பிறகு பஹல்காமில் நிலவும் சூழலை விவரிக்கும் புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த தாக்குதலில் காயமடைந்த சுற்றுலா பயணிகள் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஜி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜி.எம்.சி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற ஒருவர்
பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்

இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இறந்தவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். மேலும், முதலமைச்சர் உமர் அப்துல்லாவுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திலும் அமித் ஷா பங்கேற்றார்.

பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஹல்காமில் துணை ராணுவத்தைச் சேர்ந்தவர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தபோது
பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, பஹல்காமை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, தாக்குதலுக்குப் பின்னர் இப்பகுதியிலிருந்து வாகனங்கள் வெளியேறாதவாறு பாதுகாப்புப் படையினர் முடக்கியுள்ளனர்

இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், "நான் அதிர்ச்சியடைந்தேன். இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியாக தெரியவில்லை. அங்குள்ள நிலைமை பற்றி தெளிவாக தெரிய வந்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது", என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன
பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெறிச்சோடி காணப்படும் நகரின் மையப்பகுதியான லால் சௌக்
பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அனந்த்நாகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக மக்கள் பல்வேறு இடங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து ஸ்ரீநகரில் போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய மாநாட்டுக் கட்சியினர்
பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஹல்காமில் உள்ளூர் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி இந்த தாக்குதலுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அவர்களின் ஊரான மகாராஷ்டிராவின் டோம்பிவாலியில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு