சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாத பிபிசி செய்தியாளர்களின் உணர்வுப்பூர்வமான கதைகள்

காணொளிக் குறிப்பு, சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாத பிபிசி செய்தியாளர்களின் உணர்வுப்பூர்வமான கதைகள்
சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாத பிபிசி செய்தியாளர்களின் உணர்வுப்பூர்வமான கதைகள்

ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் பத்திரிகை ஒடுக்குமுறைகள் காரணமாக, தங்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியேறிய பிபிசி உலகச் சேவைப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டிலிருந்து இரட்டிப்பாகி தற்போது கிட்டத்தட்ட 310 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இரான் உட்பட பிற நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

பலர் சிறைத்தண்டனை, மரண அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களை நேரிலும், இணையத்திலும் எதிர்கொள்கின்றனர்.

பிபிசி உலகச் சேவையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டுவிட்டு வெளியேறி வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற உண்மையை எதிர்கொள்வது எப்படி இருக்கும் என்று தங்கள் தனிப்பட்ட கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாத பிபிசி செய்தியாளர்கள்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)