வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துள்ள லிபியாவில் எழுந்துள்ள இன்னொரு சிக்கல்

காணொளிக் குறிப்பு, உலகை திடுக்கிட வைத்த 'சுனாமி' போன்ற வெள்ளம்; லிபியாவில் இப்போது மற்றொரு சிக்கல்
வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துள்ள லிபியாவில் எழுந்துள்ள இன்னொரு சிக்கல்

லிபியாவில் டேனியல் புயல் தாக்கியதால், இரண்டு அணைகள் திடீரென உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

குடும்பங்கள் பல மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கிய காட்சிகளை பார்த்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அங்கு தற்போது மற்றொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் உயிர் தப்பிய மரியம் அல்க்விதி என்ற பெண், வெள்ள நீர் சூழ்ந்ததால் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் தனது மூன்று சகோதரர்களுடன் இருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டு மொட்டை மாடியிலும் சிலர் இருப்பதை பார்த்துள்ளார்.

ஆனால், "திடீரென அவர்களை காணவில்லை. கட்டடங்கள் அதிர்வதைக் கண்டு முதலில் பூகம்பம் என நினைத்தோம். ஆனால், பிறகு தான் தெரிந்தது, வெள்ளத்தில் அருகில் இருந்த கட்டடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழுகின்றன என்று. அப்போது தான், மொட்டை மாடியில் இருந்தாலும் நாங்களும் உயிரிழக்க வாய்ப்புள்ளது என்ற அச்ச உணர்வு தொற்றிக் கொண்டது" என்றார் அந்த பெண்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: