இயற்கை முறையில் 'முருங்கை எண்ணெய்' உற்பத்தி செய்து சாதிக்கும் பெண் – காணொளி
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுகந்தி.
இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் 2017-ம் ஆண்டு அவரது கணவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
புற்றுநோயால் கணவனை இழந்த நிலையில்தான் சுகந்தி இயற்கை விவசாயம் பக்கம் கவனம் செலுத்தினார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
மூலனூரில், வறட்சியையும் தாங்கும் குட்டை ரக நாட்டு முருங்கையை விளைவித்தார் சுகந்தி. ஆனால், இதனை முற்றிய காய் எனக் கூறி, மக்கள் செயற்கை உரம் போட்டு விளைவித்த ஹைப்ரிட் முருங்கை வகையையே விரும்பி பயன்படுத்தினர்.
அதனால் இயற்கை முறையில் சாகுபடி செய்த முருங்கை விதைகளில் இருந்து எண்ணெய் தயாரித்து வெளிநாடுகளுக்கும் விற்று வருகிறார். மேலும் முருங்கை இலையில் இருந்து சூப், சாதப்பொடி, இட்லிப் பொடி, லட்டு என மதிப்புக்கூட்டுப் பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து செய்து வருகிறார்.
தயாரிப்பு, ஒளிப்பதிவு, மற்றும் படத்தொகுப்பு: கலைவாணி பன்னீர்செல்வம், பிபிசி தமிழுக்காக.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













