இந்தியாவில் விண்கல் தாக்கியதால் உருவான ஏரி - எங்கே உள்ளது தெரியுமா?

காணொளிக் குறிப்பு, விண்கல் தாக்கியதால் உருவான 'மர்ம' பள்ளம் - இந்தியாவில் எங்கு உள்ளது?
இந்தியாவில் விண்கல் தாக்கியதால் உருவான ஏரி - எங்கே உள்ளது தெரியுமா?

இது ஏதோ ஒரு பழமையான ஏரி மட்டுமில்ல, இது ஒரு புவியியல் அற்புதம்.

இந்தியாவின் லோனார் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒரு விண்கல் தாக்கியதில் இது உருவானது.

இது 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக சில முந்தைய ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.

லோனாரின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து பண்டைய நூல்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு ஜூனில் வெப்பம் காரணமாக ஏரியில் உப்பின் அளவு அதிகரித்ததால் நீர் சிறிது நேரம் இளஞ்சிவப்பு நிறமாக மாறியது.

அதிகரித்த உப்புத்தன்மை நிறமியை உற்பத்தி செய்யும் உயிரினங்கள் செழிக்க உதவியது.

தற்போது, ​​மகாராஷ்டிர அரசு லோனார் பள்ளத்தை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக மாற்ற முன்மொழிந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு