காய்கறிகள், பழங்கள் வீணாவதைத் தடுக்க ஒரு ‘பளிச்’ யோசனை – காணொளி

காணொளிக் குறிப்பு, காய்கறிகள், பழங்கள் வீணாவதைத் தடுக்க ஒரு ‘பளிச்’ யோசனை – காணொளி
காய்கறிகள், பழங்கள் வீணாவதைத் தடுக்க ஒரு ‘பளிச்’ யோசனை – காணொளி

இந்தியாவில் விளையும் மூன்றில் ஒரு பங்கு காய்களும், பழங்களும் அழுகி வீணாக சாலையில் கொட்டப்படுகின்றன.

அவற்றை பதப்படுத்த போதிய வசதிகள் இல்லாததே இதற்கு காரணம்.

மகாராஷ்ட்ராவின் அவுரங்காபாத்தைச் சேர்ந்த ஒரு ஸ்டர்ட் அப் நிறுவனம், இந்தப் பிரச்னையை களைவதற்கு சூர்ய சக்தி மூலம் இயங்கும் உலர்த்திகளை உருவாக்கியுள்ளது.

கிராமப்புற பெண்களால் இயக்கப்படும் இந்த உலர்த்திகள் காய்கறிகள், பழங்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து விடுகின்றன.

உள்ளூர் விவசாயிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதுபோன்ற தொழில்நுட்பங்களை கையாளும் திறனை வளர்த்துக்கொள்வது விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகளுக்கு மிகுந்த பலனளிக்கும்.

காய்கறிகள், பழங்கள், வேளாண் விளைபொருட்கள் வீணாவதைத் தடுக்க யோசனை

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)