மரணத்தை ஏற்படுத்தும் கடும் விஷமுடைய தேள்களை இவர்கள் இரவில் தேடி அலைவது ஏன்?

காணொளிக் குறிப்பு, உலகின் அதீத விஷமுடைய தேள்களைத் தேடி அலைகின்றனர் இந்த விஞ்ஞானிகள்
மரணத்தை ஏற்படுத்தும் கடும் விஷமுடைய தேள்களை இவர்கள் இரவில் தேடி அலைவது ஏன்?

பாகிஸ்தானில் இரவு நேரத்தில் உலகின் அதீத விஷமுடைய தேள்களைத் தேடி அலைகின்றனர் இந்த விஞ்ஞானிகள்.

கருந்தேள், அரேபிய கொழுப்பு-வால் உடைய தேள் போன்ற கடுமையான விஷமுடைய தேள்களை அவர்கள் தேடி வருகின்றனர். இந்த தேள்களின் விஷம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. எனவே புற்றுநோய் ஆராய்ச்சிக்காக விஷத்தை எடுக்க விஞ்ஞானிகளுக்கு அரசின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கள்ளச்சந்தையில் ஒரு லிட்டர் விஷம் பல லட்சங்களுக்கு விற்கப்படுகிறது. அவற்றை சட்டவிரோதமாக எடுத்துக்கொடுக்கும் மக்களுக்கு சில கும்பல்கள் பணம் வழங்குகின்றன. பின்னர் அவை சட்டவிரோத ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

தங்களது முயற்சியால் சட்டவிரோத தேள் வேட்டை குறையும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அவர்களது ஆபத்து நிறைந்த பணி புற்றுநோய் ஆய்விற்கு உதவுகிறது. ஆய்வு முடிவுகளை ஒரு சர்வதேச ஆய்விதழில் வெளியிட விஞ்ஞானிகள் குழு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான்: இரவில் கடும் விஷமுடைய தேள்களைத் தேடி அலையும் விஞ்ஞானிகள் குழு, ஏன்?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)