You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய பந்துவீச்சாளர்கள் எதிரணியின் ஸ்டம்புகளை சிதறடித்து மிரட்டிய 9 தருணங்கள்
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணியில் பேட்ஸ்மேன்களுக்கு இணையாக பந்துவீச்சாளர்களும் ஜொலித்து வருகின்றனர்.
நடப்பு உலகக்கோப்பையில் எதிரணி பேட்ஸ்மேன்கள் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களும் திணறடித்து வருகின்றனர். தட்டையான இந்திய ஆடுகளங்களில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பந்துவீச்சுக்குப் பெயர் போன அணிகளின் வீரர்களே திணறும்போது இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாடு ஆச்சரியப்பட வைக்கிறது.
அவ்வாறு, இந்திய பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகள் எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை சிதறடித்த தருணங்களைப் பார்க்கலாம்.
இந்தியா - நியூசிலாந்து லீக் ஆட்டம்
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி வீசிய 48வது ஓவரின் 5வது பந்தில் நியூசிலாந்து வீரர் மார்க் ஹென்றி கிளீன் போல்டான காட்சி.
இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் பாகிஸ்தான் அதிரடி வீரர் ஃபகார் ஜமான் தனது மிடில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
இந்தியா - தென் ஆப்ரிக்கா
நடப்பு உலகக்கோப்பையில் தனது அதிரடியால் எதிரணிகளை மிரட்டி வந்த தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டி காக்கை, தான் வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே முகமது சிராஜ் அவுட்டாக்கினார்.
இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் 34வது ஓவரின் கடைசிப் பந்தை ஜஸ்பிரித் பும்ரா 'ஸ்லோ ஆஃப்கட்டராக' வீச முகமது ரிஸ்வானின் ஸ்டம்புகள் சிதறின.
இந்தியா - இங்கிலாந்து
இந்தியா - இங்கிலாந்து ஆட்டத்தில் ஜோஸ் பட்லருக்கு சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் வீசிய பந்து, ஆஃப் சைடுக்கு வெளியே விழுந்து நன்கு சுழன்று மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது.
இந்தியா - தென் ஆப்ரிக்கா
தென் ஆப்ரிக்க கேப்டன் டெம்பா பவுமா இந்திய சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்த காட்சி.
இந்தியா - இலங்கை
இலங்கை அணியை வெறும் 55 ரன்களில் இந்தியா சுருட்டிய ஆட்டம் இது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் குசால் மென்டிஸ், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்த காட்சி.
இந்தியா - நியூசிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முகமது ஷமி, தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த காட்சி இது. நியூசிலாந்து வீரர் வில் யங் ஆட்டமிழந்து வெளியேறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)