இம்ரான் கான் கைதுக்கு பின்னணியில் இத்தனை காரணங்களா? எளிய விளக்கம்

காணொளிக் குறிப்பு, இம்ரான் கான் கைதுக்கு பின்னணியில் இத்தனை காரணங்களா? எளிய விளக்கம்
இம்ரான் கான் கைதுக்கு பின்னணியில் இத்தனை காரணங்களா? எளிய விளக்கம்

இம்ரான் கான் கைதுசெய்யப்படலாம் என்ற ஊகம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இது திடீரென நடந்ததல்ல. பின்னணியில் நடவடிக்கை நடந்து கொண்டுதான் இருந்தது.

பாகிஸ்தானில் ஊழலைத்தடுக்கும் பொறுப்பு உள்ள நிறுவனம் தேசிய பொறுப்புடைமை பணியகம் (NAB). அந்நிறுவனம் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அவரை நேரில் ஆஜராகுமாறும், சில கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறும் கேட்டிருந்தது. அதற்கு அவர் பதிலளிக்காததால் படிப்படியாக விஷயம் கைது வரை சென்றது என்கிறார் பிபிசி உருது சேவையின் ஆசிரியர் ஆசிஃப் ஃபரூக்கி.

இம்ரான் கான் கைது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: