பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலின் விளைவுகளைக் காட்டும் 10 புகைப்படங்கள்

பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத்தில் இந்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு வழிபாட்டுத் தலம் அழிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் அதை ஆய்வு செய்ய வந்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத்தில் இந்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு வழிபாட்டுத் தலம் அழிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் அதை ஆய்வு செய்ய வந்துள்ளன.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் இந்தியா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்கள் பல கட்டடங்களுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 57 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தியாவால் தாக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை குறித்து இரு நாடுகளும் வெவ்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் கூற்றுப்படி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் மொத்தம் ஒன்பது இடங்களில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், இந்தியா மொத்தம் ஆறு இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது.

இந்தியா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலுக்குப் பிறகான பாகிஸ்தானின் சூழலை இந்த 10 புகைப்படங்கள் காட்சிபடுத்துகின்றன.

பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலம் தாக்குதலுக்குப் பிறகு பெருமளவில் சேதமடைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலம் தாக்குதலுக்குப் பிறகு பெருமளவில் சேதமடைந்துள்ளது.

மறுபுறம், பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், "பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இந்தியா தவறிழைத்துவிட்டது. அதற்குக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று கூறினார்.

லாகூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள முரிட்கே நகரில் அரசு சுகாதாரம் மற்றும் கல்வி வளாகம் எனப்படும் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாகூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள முரிட்கே நகரில் அரசு சுகாதாரம் மற்றும் கல்வி வளாகம் எனப்படும் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
லாகூருக்கு அருகிலுள்ள முரிட்கேவில் உள்ள அரசு சுகாதாரம் மற்றும் கல்வி வளாகத்தின் வெளிப்புறக் காட்சி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாகூருக்கு அருகிலுள்ள முரிட்கேவில் உள்ள அரசு சுகாதாரம் மற்றும் கல்வி வளாகத்தின் வெளிப்புறக் காட்சி.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
முரிட்கே நகரில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அந்தக் கட்டடம் இடிந்து சிதைந்து தரைமட்டமாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முரிட்கே நகரில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அந்தக் கட்டடம் இடிந்து சிதைந்து தரைமட்டமாகியுள்ளது.
லாகூருக்கு அருகிலுள்ள முரிட்கேவில் உள்ள அரசு சுகாதார நிலையம், தாக்குதலுக்குப் பிறகு தீவிரமாகச் சேதம் அடைந்துள்ளது. மக்கள் தங்களது உடமைகளை அங்கிருந்து எடுத்துச் செல்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாகூருக்கு அருகிலுள்ள முரிட்கேவில் உள்ள அரசு சுகாதார நிலையம், தாக்குதலுக்குப் பிறகு தீவிரமாகச் சேதம் அடைந்துள்ளது. மக்கள் தங்களது உடமைகளை அங்கிருந்து எடுத்துச் செல்கிறார்கள்.
பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு வீடுகளும் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு வீடுகளும் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்டது என இந்தியா கூறும் ஒரு கட்டடம், முரிட்கேவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்டது என இந்தியா கூறும் ஒரு கட்டடம், முரிட்கேவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பஹாவல்பூருக்கு அருகிலுள்ள அகமதுபூர் ஷர்கியாவில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலம் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பஹாவல்பூருக்கு அருகிலுள்ள அகமதுபூர் ஷர்கியாவில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலம் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.
இந்தியாவால் முசாஃபராபாத்தில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலுக்குப் பிறகு வழிபாட்டுத் தலம் சேதமடைந்துள்ளது. அக்கட்டடத்தின் பகுதிகள் சிதறிக் கிடப்பதைக் காணலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவால் முசாஃபராபாத்தில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலுக்குப் பிறகு வழிபாட்டுத் தலம் சேதமடைந்துள்ளது. அக்கட்டடத்தின் பகுதிகள் சிதறிக் கிடப்பதைக் காணலாம்.
பாகிஸ்தானில் இந்தியா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல், இரவில் எப்படி நடந்தது என்பதை அறிந்துகொள்ள பாகிஸ்தான் குடிமக்கள் விரும்புகின்றனர். ராவல்பிண்டியில் காலை செய்தித்தாள் வாசிக்கும் மக்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானில் இந்தியா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல், இரவில் எப்படி நடந்தது என்பதை அறிந்துகொள்ள பாகிஸ்தான் குடிமக்கள் விரும்புகின்றனர். ராவல்பிண்டியில் காலை செய்தித்தாள் வாசிக்கும் மக்கள்.
இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதல் மர்காஸ் தைபா வளாகத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன் சேதங்கள் செயற்கைக்கோள் படங்களில் தெளிவாக காணப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதல் மர்காஸ் தைபா வளாகத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன் சேதங்கள் செயற்கைக்கோள் படங்களில் தெளிவாக காணப்படுகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு