இந்தியா - பாகிஸ்தான் மோதல்: தற்போதைய கள நிலவரம் 10 படங்களில்

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உள்பட்ட காஷ்மீரில் உள்ள ''பயங்கரவாத இலக்குகளை'' குறிவைத்து தாக்கியதாக இந்தியா கூறியது.

இந்தியாவின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகள் இடையிலான பதற்றம் அதிகரித்தது.

இதனை தொடர்ந்து ஜம்மு, பஞ்சாப் போன்ற எல்லையோர பகுதிகளில், பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேபோல பாகிஸ்தானும் இந்தியா தங்கள் நாட்டுக்குள் 3 விமானப்படைத் தளங்களை தாக்கியதாக கூறியுள்ளது.மேலும் இந்தியாவுக்கு எதிராக பதிலடி நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அதிவேக ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், அவை அனைத்தையும் முறியடித்து விட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியதாகவும் இந்தியா கூறியுள்ளது.

பாகிஸ்தானின் 3 விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவின் பெரும்பாலான ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் இந்த கூற்று குறித்து இந்தியா இதுவரை ஏதும் கூறவில்லை.

பிபிசியால் இதை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு