'ஒரு இந்திய ராணுவ வீரர் கூட இருக்கக் கூடாது' - மாலத்தீவு அதிபராகும் முகமது முய்சு இவ்வாறு கூறுவது ஏன்? – வீடியோ
'ஒரு இந்திய ராணுவ வீரர் கூட இருக்கக் கூடாது' - மாலத்தீவு அதிபராகும் முகமது முய்சு இவ்வாறு கூறுவது ஏன்? – வீடியோ
கடந்த மாதம் மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முய்சு, நேரத்தைச் சிறிதும் வீணடிக்காமல், இந்தியாவைத் தனது படைகளை மாலத்தீவிலிருந்து வெளியேற்றும்படி கேட்டிருக்கிறார்.
மாலத்தீவு நீண்ட காலமாக இந்தியாவின் செல்வாக்கின் கீழ் உள்ளது.
முய்சுவின் இந்தக் கோரிக்கை இரு நாடுகளுக்குக் இடையே இராஜ தந்திரப் பதற்றங்களை தூண்டக் கூடும்.
மாலத்தீவை இந்தியாவின் நிழலிலிருந்து வெளியேற்ற அவர் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்தியாவைத் தனது படைகளைத் திருப்பி அழைத்துக் கொள்ளச் சொல்வது பெரிய சவாலாக இருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



